Pages

Tuesday, July 26, 2022

ஒரு ஆசிரியரின் பார்வையில் மாணவர்களின் மாபெரும் தவறுகள் :

ஒரு ஆசிரியரின் பார்வையில் மாணவர்களின் மாபெரும் தவறுகள் :

 

என்னுடைய ஆசிரியர் பணி 20 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கி விட்டாலும் கடந்த 10 வருங்களாக தான் முழு நேரமாக மாணவர்களுடன் இருக்கு வேண்டிய சூழ்நிலையில் நான் பயிற்சி அளித்த (லாப நோக்கமின்றி) என்னுடைய வழிகாட்டுதலில் படித்த 300 மாணவர்களில் 150 பேர் மட்டும் குறைந்தது எதாவது ஒரு தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். அரசு வேலையில் உள்ளனர் மற்றவர்கள் ஏன் தோல்வி அடைந்தனர் என ஆராய்ச்சி செய்த பொது கிடைத்த முடிவுகளே என்னை இந்த கட்டுரையை எழுத  துண்டியது.

ஒரு TNPSC தேர்வில் 100000 Rank  வாங்கிய ஒரு மாணவன் எப்படி அடுத்த தேர்வில் 1000 Rank இடத்தில் வந்து பாசாகிறார் ஆனால் Rank 4000 வாங்கிய மாணவர் மீண்டும் அதே Rank அல்லது அதற்கு குறைவாக Rank வாங்கி தோல்வி தழுவுகிறார் என்பதற்கான காரணத்தை பார்ப்போம்.

 

1. தன்னம்பிக்கை இல்லாதது:

TNPSC DRB SRB-போன்ற போட்டி தேர்வுகளில் பாஸாக வேண்டுமானால் ஒரு மாணவனுக்கு இருக்கு வேண்டிய முதல் தகுதி தன்னம்பிக்கை. என்ன தான்   திறமையுடையவர்களாக இருந்தாலும் தன்னம்பிக்கை இல்லாதவர் தோல்வியையே தழுவ வேண்டி இருக்கும். தன்னபிக்கை உள்ளவர் எந்த ஒரு இடர்பாட்டையும் எளிதில் சமாளித்து தேர்வில் வெற்றி பெற்று விடுவார்.   

2. சரியான பயிற்சி பயிற்சி மையத்திற்கு செல்லாதது

சரியான பயிற்சி மையம் மட்டும் அமைந்து விட்டால் எந்த ஒரு சராசரி மாணவனும் இரண்டு வருடங்களில் கட்டயம் பாஸ் பண்ணிவிட முடியும் , அனால் தற்பொழுது பயிற்சி மையங்களை விட வியாபார மையங்களே அதிகம் உள்ளது.வணிக நோக்கில் தான் எல்லா பயிற்சி மையங்களும் செயல்பட்டாலும் சரியான வழிகாட்டும் பயிற்சி மையங்களை தேர்ந்தெடுத்து விட்டால் உங்களின் வேலை பாதியாக குறைந்துவிடும். பயிற்சி மையங்கள் எவ்வாறு மாணவர்களை ஏமாறுகிறார்கள் என்பதற்கு சில எடுத்துகாட்டுக்கள்

1)    அளவுக்கு அதிகமான விளம்பரங்கள்

2)    தேர்ச்சி பெற்றவர்களை விட அதிக மாணவர்களை பாஸானதாக காட்டுவது

3)    விளம்பரத்தை பார்த்து ஏமாறுவது

4)    சென்னை, IAS, மனிதநேயம் போன்ற வார்த்தைகளை பயன்படுத்துவது

5)    சென்ற தேர்வில் எங்கள் மட்டிரியகளில் இருந்து 180 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது என விளம்பரபடுத்துவது

6)    அதிகமாக நோட்ஸ் எழுத வைக்கும் பயிற்சி மையங்கள்

7)    கும்பல் அதிக உள்ள பயிற்சி மையம் தரமமானது என நினைப்பது.

8)    ஒரே வகுப்பில் 200 TO 400 பேருக்கு பாடம் நடத்துவது கட்டாயம் மாணவர்களுக்கு எந்த ஒரு பயனும் இருக்காது

3. மெட்டிரியல் மெண்டல்கள்

என்னால் மெட்டிரியல் மெண்டல்கள் என நான் செல்லமாக குறிப்பிடும் இவர்கள் முக்கிய வேலையே படிக்க பல பயிற்சி மையங்களின் notes சேகரிக்கிறேன் என்ற பெயரில் படிப்பை மறந்து மெட்டிரியல் சேகரிப்பில் இறங்கி விடுவது தான். இவர்களின் பார்வையில் அதிக மேட்டிரியல்கள் / புத்தகங்கள் தான் வெற்றியை தீர்மானிக்கும் என நம்புகிறவர்கள்  but my view is More luggage less comport.

4. பயிற்சி மையத்தில் சேர்ந்து விட்டாலே வேலை கிடைத்துவிடும் என நம்புவது.

பயிற்சி மையம் சென்று விட்டாலே வேலை கிடைத்து விடும்  என நம்பும் மாணவர்கள் பலர் உள்ளனர். நான் ஒரு முறை பஸில் செல்லும் பொழுது ஒரு மாணவரிடம் பேச்சு கொடுக்க நேர்ந்தது அப்பொழுது அவர் ஒரு பிரபல பயிற்சி மையத்தில் 4 வருடமாக படித்து வருவதாகவும் அங்கு இரண்டு முன்று வருடம் படித்தால் மட்டுமே பாஸாக முடியம் அதனால் வேறு எந்த வேலைக்கு செல்லாமல் பயிற்சி மையம் சென்று வருவதாகவும் தெரிவித்தார் , ஆனால் உண்மை என்ன வென்றால் இன்று உள்ள போட்டி நிலையில் குறைத்து 6 மாதம் முதல் 1 வருடம் கடினமாக/ புத்திசாலித்தனமாக படித்தால் நிச்சயம் வேலை கிடைத்து விடும், தேர்வு அறிவிப்பு வந்தவுடன் பயிற்சி மையம் சென்றால் கட்டாயம் தோல்விதான் வரும் என்பதை உணர மாணவர்கள் மறுக்கிறார்கள்.

5.புரிந்து படிக்காதது /மனப்பாடம் செய்ய முயல்வது

புரிந்து படித்து விட்டால் மனபாடத்திற்கு அவசியம் இல்லை. மேலும் கேள்விகள்  எந்த முறையில் வந்தாலும் விடை அளித்து விடலாம்.இது தெரியாமல் சிலர் நாள் முழுவது படித்தால் தான் வெற்றி பெற முடியும் என நினைத்து கொண்டு புத்தகமே கதியாக கிடக்கின்றனர் அது தவறு.

6. கூட்டுறவுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை பொது அறிவுக்கு கொடுக்க மறுப்பது

கூட்டுறவுக்கு கொடுக்கும் முக்கியதுவத்தை பொது அறிவுக்கு கொடுக்க மறுப்பது , உங்களின் வெற்றியை/ வாங்கும் ரேங்கையும் குறைத்து விடும்.

7.தேடல் இல்லாதது

Knowledge is power தேடல் என்பது பலருடன் பேசி, web search தேர்வு பற்றி பல புதிய விபரங்களை அறிந்து கொள்வது தேடல் நிறைய தகவல்களை அளிக்கும்.

8. மற்ற பயிற்சி மைய மாணவர்களுடன் நட்பு கொள்ளாமல் இருப்பது:

Where we are where they are என தெரிந்து கொள்ள கட்டாயம் மற்ற பயிற்சி மைய மாணவர்கள் மற்றும் சீனியர் மாணவர்கள் தொடர்பில் இருப்பது அவசியம் அப்பொழுது தான் தம்முடைய தவறுகளும், திறமைகளும் தெரிய வரும்.

9.காதல் கொண்டு கடமையை மறப்பது:  

இவர்கள் குறைந்த எண்ணிக்கையில் இருந்தாலும் திறமையான மாணவர்கள் அல்லது மாணவிகளின் படிப்பை பாழ் செய்து விடுகிறது. காதலிக்கு பெண்ணின் படிப்பு தடை செய்யபடுகிறது ஆண்களுக்கோ வெற்றி தடைபடுகிறது

10.பேப்பர் படிக்காதது

நடப்பு நிகழ்வுகள் பகுதியில் மார்க் எடுக்க வேண்டுமானால் தினசரி பேப்பர் படிக்க வேண்டும்

11. நோட்சுகளை மட்டும் நம்புவது

12.படித்து கொண்டே வேலைக்கு செல்வது.

வேலைக்கு சென்று கொண்டே படித்தால் வெற்றி கிடைக்க மிகவும் கால தாமதம் ஆகும் எனவே சேலைக்கு செல்ல மிகவும் தாமதம் ஆகும்.   

13. சொல் பேச்சை கேட்காதது

சொல் பேச்சை கேட்காமல் இருப்பது பற்றியே ஒரு மிகப்பெரிய கட்டுரை எழுதலாம் அதை பற்றி பின்னர் ஒரு விரிவான கட்டுரை வெளியிடப்படும் 

14. Whatsapp /facebook கதியாக கிடப்பது

15. பொழுது போக்குக்கு முக்கியத்தும் கொடுப்பது

பொழுது போக்குக்கு முக்கியத்தும் கொடுப்பது இக் குறையை களைந்தாலே எந்த ஒரு மாணவரும் எளிதில் போட்டி தேர்வுகளில் வெற்றி பெறலாம்.

மேற்குறிய தவறுகளை மாணவர்கள் செய்ய விடாமல் சரியாக வழி காட்டுவதாலேயே தான் கனி அகாடமி மற்ற பயிற்சி மையங்களை விட மூன்று மடங்கு அதிக வெற்றிகளை தர முடிகிறது

அதை பற்றிய கட்டுரை அடுத்த பதிவில் .... 

உங்களுக்கான உண்மையான போட்டியாளர்கள் யார்?

உங்களுக்கான உண்மையான போட்டியாளர்கள் யார்?

உங்களுக்கான உண்மையான போட்டியாளர்கள் யார்  உங்களுக்கான போட்டியாளர் உங்களுடன் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் படித்துக்கொண்டிருக்கும் உன்னுடைய சக நண்பர் அல்ல.2-3 வருடங்களாக TNPSC தேர்வுக்கு படித்து அதில் வெற்றி கிடைக்காமல் வீட்டில் சமூகத்தில் அவமானப்பட்டு வேதனையில் வெந்து தினமும் ஏதாவது செய்து வாழ்க்கயில் முன்னேற வேண்டும் என்ற நினைப்பில் ஓடிக் கொண்டு ஏதாவது ஒன்று செய்து அரசு வேலைக்கு சென்று விட வேண்டும் என்ற ஆவலில் DCM படித்து கொண்டு உன்னுடன் பக்கத்து சீட்டில் உட்கார்ந்து கொண்டு ஒன்றும் தெரியாதது போல் இருக்கும் TNPSC ASPIRANTS தான் உன்னுடைய உண்மையான போட்டியாளர்.

எனவே நீங்கள் கூட்டுறவில் 100 மதிப்பெண் வாங்கினால் அவர்களும் கட்டாயம் 100 மதிப்பெண் வாங்குவார். ஆனால் பொது அறிவு பாடத்தில் நீ ஞானசூனியம் ஆனால் அவன் ஒரு 65% பொது அறிவு படத்தை படித்து முடித்தவர்.அவர்களை வெற்றி கொள்ள செய்ய வேண்டும் என்றால் நீங்கள் அவர்களை விட அதிகமாக பொது அறிவு பாடத்தில் மதிப்பெண் பெற வேண்டும். ஆனால் என்னிடம் படிக்க வரும் பல மாணவர்களிடம் நான் கவனிக்கும் விஷயம் என்னவென்றால் அவர்கள் கேட்கும் முதல் கேள்வி நான் கூட்டுறவு பாடத்தை எனக்கு நடத்துங்கள் கூட்டுறவு பாடத்தை நடத்துங்கள் (எனக்கு பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேண்டும்”) என்ற எண்ணத்தில் தான் இருக்கின்றனர். அட முட்டாளே உன்னுடைய போட்டியாளர் யார் என்றால் அவன் ஏற்கனவே மூன்று இரண்டு மூன்று வருடங்கள் TNPSC  தேர்வுக்காக பயிற்சி எடுத்து விட்டு அதில் தோல்வியை தழுவி மூன்று வருடம் தன்னுடைய வாழ்க்கையை போட்டித்தேர்வுக்கான அர்ப்பணித்துள்ளார் அவரை நீ வெற்றி கொள்ள வேண்டுமென்றால் நீ அவரை விட பல மடங்கு படித்திருக்க வேண்டும். உங்களின் அடுத்த உண்மையான போட்டியாளர் யார் என்றால் சென்ற முறை நேர்முக தேர்வுக்கு தகுதி பெற்று சில பல மதிப்பெண்கள் குறைவு காரணமாக வேலை கிடைக்காமல் இருக்கும் உங்கள் சீனியர் மாணவர்கள்.

1.    2020-21 கூட்டுறவு தேர்வு நேர்மையாகா நடக்காது என்ற எண்ணத்தில் ஒழுங்காக படிக்காத ஆனால் நான்ற்காக படிக்க கூடிய SENIOR DCM STUDENTS.

2.    2022-23 வருடம் DCM பயிற்சியில் சேர போகிறவர்கள்.

 

 

ஆனால் இன்று என்னிடம் பயிற்சியில் சேரும் பெரும்பாலான மாணவர்கள்  கூட்டுறவு படித்து முடித்து விட்டால் வேலை கிடைத்து விடும் என்ற குருட்டு நம்பிக்கையில் தான் உள்ளனர். அது அவர்கள் செய்யும் மிகப் பெரிய தவறு .,

சரி அப்பொழுது  கூட்டுறவு மாணவர்கள் செய்யும் மாபெரும் தவறுகள் என்ன அடுத்த கட்டுரையில் ……. 

கூட்டுறவு தேர்வில் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்?

கூட்டுறவு தேர்வில் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்

கூட்டுறவு தேர்வில் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்

 

கூட்டுறவு தேர்வில் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்? படிக்க வேண்டிய புத்தகங்கள் என்ன போன்ற ஏராளமான கேள்விகள் மாணவர்களிடையே இருக்கும் அதை தீர்ப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம்.

கூட்டுறவு தேர்வு நடைமுறைகளை பொருத்தவரை மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படுகிறது.எழுத்துத் தேர்வில் 200 கேள்விகளுக்கு பிறகு நேர்முகத் தேர்வு 2:1 என்ற நடைமுறையில் நடத்தப்படுகிறது. நேர்முகத் தேர்வுக்கு 15 சதவீதம் மதிப்பெண்(30 Marks)அளிக்கப்படுகிறது.எழுத்துத் தேர்விற்கு 85 சதவீதம் மதிப்பெண்(170 Marks) அளிக்கப்படுகிறது.BUT DUE TO 15% RESTRICTIONS SRB & DRB FOLLOWS SOME FORMULAS TO ARRIVE THE MARK.

பொதுவாகவே எந்த ஒரு போட்டித் தேர்வுகளும் நேர்முகத் தேர்வில் பங்களிப்பு மிகவும் குறைவாகவே இருக்கும் என்ன காரணம் என்றால் பழைய நீதிமன்றத் தீர்ப்புகள் அரசியல்வாதிகளும் நிர்வாகமும் மாணவர்களை வஞ்சித்து விடக்கூடாது என்ற காரணத்தால் நேர்முகத்தேர்வில் குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச மதிப்பெண் எவ்வளவு அளிக்க வேண்டும். ஒரு மாணவனுக்கு 30 மதிப்பெண் அடுத்த மாணவனுக்கு 5 மதிப்பெண் என்ற ரீதியில் மதிப்பெண் அளித்து படிக்காத ஒரு மாணவனை வெற்றிபெற செய்துவிடமுடியாது.

IN TNPSC THEY ARE FOLLOWING 5 SLAB SYSTEMS. எனவே ஒரு நன்றாக படிக்கும் ஒரு மாணவன் குறைந்தது ஏழு கேள்விகள் அதிகமாக பதில் அளித்துவிட்டார் எனில் அவர்  வெற்றியை எந்த ஒருவராலும் தடுக்க முடியாது. எனவே கூட்டுறவு  தேர்வில் நேர்முகத் தேர்வில் பங்களிப்பு மிகவும் குறைவு. இங்குதான் அரசியல்வாதிகள் & அதிகாரிகளின் தலையீடுகள் அதிகம் வரும். அதை பயன்படுத்தி தான் அவர்கள் நேர்முக தேர்வுக்கு பணம் வாங்குகிறார்கள்.கனி அகாடமி ஆரம்பம் முதல் கேட் விட கேள்விகள் அதிக என்ற கொள்கையை பின்பற்றியதால் கனி அகாடமியில் படித்த எவரும் வேலைக்கு பணம் கொடுக்கவில்லை என்பதில் பெருமை கொள்கிறோம்.  

எழுத்து தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும்

DRB SRB 200 கேள்விகள் கேட்கப்படுகிறது அந்த 200 கேள்விகளில் 100 கேள்விகள் கூட்டுறவு பாடத்திட்டத்திலிருந்து 100 கேள்விகள் தமிழ் மற்றும் பொது அறிவு பாடத்தில் இருந்தும் கேட்கப்படுகின்றது.கூட்டுறவில் கேட்கப்படும் 100 கேள்விகளில் 10 கேள்விகள் Computer Science பாடத்தில் இருந்து வரும். பொதுவாகவே கூட்டுறவு பாடத்திட்டம் என்பது மிகவும் சிறிய பாடத்திட்டம் அப்பாடத்திட்டத்தை மதிப்பெண் பெறுவது என்பதும் அப் பாடத்திட்டத்தை மிக குறுகிய காலத்தில் படித்து முடித்து விடலாம் என்பதும் உண்மையே.

ஆனால் நீங்கள் DRB SRB  தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் உடையவர் என்றால் உங்களுடைய கவனம் பொதுஅறிவு பாடத்திட்டத்தில் தான் இருக்க வேண்டும். பொது அறிவு என்பது கிட்டத்தட்ட தமிழ் ,கணிதம் ,இந்திய வரலாறு ,அறிவியல், பொருளாதாரம், இந்திய அரசியலமைப்பு ,புவியியல் & நடப்பு நிகழ்வுகள் பகுதிகள் அடங்கிய மிகப்பெரிய பாடத்திட்டம்.அதைப் படித்து முடிக்க வேண்டும் என்றால் நீங்கள் குறைந்தது ஒரு வருடம் படிக்க வேண்டும் இதன் காரணமாகத்தான் சென்ற முறை வெற்றி பெற்ற கூட்டுறவு பணியாளர்களை பார்த்தால் அதில் பாதிக்கு மேற்பட்டோர் ஏதாவது ஒரு வகையில் TNPSC தேர்வுக்காக படித்துக் கொண்டு வந்தவர்களாக இருப்பார்கள்.

எனவே மேற்குறிய பொது அறிவு பாடத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து படிக்க துவங்குகள் அப்பொழுது தான் உங்களால் வெற்றி பெற முடியும் .ஆனால் பெரும்பாலான மாணவர்கள் கூட்டுறவை மட்டும் படித்து முடித்து விட்ட வெற்றி உறுதி என்ற எண்ணத்தில் தான் இருக்கிறார்கள்.ஏன் அவ்வாறு இருக்கிறார்கள் என்றால் உன்னடைய உண்மையான போட்டியாளர்கள் யார் என்பது அவர்களுக்கு தெரியவில்லை?   

உன்னடைய உண்மையான போட்டியாளர்கள் யார்   அடுத்த கட்டுரையில்

HOW TO READ GK PORTION EASSY VERY SOON …..

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

கூட்டுறவு வங்கித் துறை தேர்வு- வரலாறு

 

 

 

கூட்டுறவு வங்கித் துறை தேர்வு வரலாறும் நடைமுறையும்

 

கடந்த காலங்களில் கூட்டுறவு தேர்வை பொருத்தவரை ஆள்சேர்ப்பு முறை என்பது எவ்வாறு நடைபெற்றுக் கொண்டிருந்தது என்றால் அதற்கென தெளிவான ஒரு ஆட்சேர்ப்பு நடைமுறை இல்லை. பின்னர் பல நீதிமன்ற வழக்குகள் மற்றும் அதன் தீர்ப்புகளின் காரணமாகவும் அந்த ஆள் சேர்ப்பு நடைமுறை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலங்களில் இருந்து பெறப்பட்ட பட்டியல்கள் மூலமாகவும் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

2012ஆம் ஆண்டு வரை கூட்டுறவு வங்கிகள் மற்றும் கூட்டுறவு  வேளாண்கடன் சங்கங்கள் தொடர்பான நியமனங்கள் அனைத்தும்  வேலைவாய்ப்பு அலுவலகங்கள் அல்லது பணம் கொடுப்பவர்களுக்கு தற்காலிக பணியாளர்கள் நியமனம் செய்து பின்னர் அவர்களை இரண்டு ஆண்டுகளுக்கு பின்பு பணி நிரந்தரம் செய்வது என்ற முறையிலேயே நடைபெற்றுக் கொண்டிருந்தது.

2009 Appointment through Employment Exchange அத்தேர்விலும் ஒரு சில இடங்கள் தவிர மற்ற இடங்களில் அரசியல்வாதிகளின் தலையீடுகள் மிக அதிக அளவில் இருந்த காரணத்தால் பணம் கொடுத்தவர்களே அதிக அளவில் வேலைக்கு சென்றனர்.

இத்தேர்வு நடைமுறைகள் 2012-14 ஆம் ஆண்டு மாறியது. பல உயர் நீதிமன்ற தீர்ப்புகள் சில பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு வைத்துத்தான் ஆட்களை தேர்வு செய்ய வேண்டும் என தீர்ப்பளித்ததால் வேறு வழி இல்லாமல் அரசு கூட்டுறவுத்துறை மாநில கூட்டுறவு பணியாளர் தேர்வாணையம் என்ற அமைப்பை ஏற்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது. முதல் முறையாக 2012ஆம் ஆண்டு போட்டி தேர்வுகள் மூலம் பணியாளர்களை தேர்வு செய்யும் நடைமுறை தொடங்கியது. அதன் காரணமாக 2012ம் ஆண்டு கூட்டுறவு வங்கிக்கான ஒரு தேர்வு அறிவிக்கை வெளியிடப்பட்டது. ஆனால் அந்த அறிக்கை பல நீதிமன்ற வழக்குகள் மற்றும் சட்ட சிக்கல்கள் காரணமாக 2014ஆம் ஆண்டு முடிவடைந்தது. அப்பொழுது கூட மத்திய மாவட்டம் கூட்டுறவு வங்கியில் மட்டுமே தேர்வுகள் மூலம் ஆட்களை தேர்வு செய்தனர்.

2012ஆம் ஆண்டு நடைபெற்ற கூட்டுறவு தேர்வில் மிக குறைந்த அளவே கூட்டுறவு தொடர்புடைய கேள்விகள் இடம் பெற்று இருந்தது. 5 கேள்விகள் மட்டுமே கூட்டுறவு பாடத்திலிருந்து கேட்கப்பட்டிருந்தது. மற்ற கேள்விகள் அனைத்துமே பொது அறிவு  பாடத்திட்டத்தில் கேட்கப்பட்டிருந்தது. 2012ஆம் ஆண்டு நடைபெற்ற கூட்டுறவு தேர்வு பணிகள் 2014 ஆம் ஆண்டு முடிவடைந்தது. பல நீதிமன்ற வழக்குகளுக்கு பின்னர் 2014 ஆம் ஆண்டு தேர்வுசெய்யப்பட்ட அனைவரும் பணியமர்த்தப்பட்டனர். அப்பொழுது கூட மத்திய மாவட்டம் கூட்டுறவு வங்கியில் மட்டுமே தேர்வுகள் மூலம் ஆட்களை தேர்வு செய்தனர்.

2019 ஆம் ஆண்டு மீண்டும் நேரடி போட்டி தேர்வுகள் மூலமாக ஆட்களை தேர்வு செய்யும் நடைமுறை தொடர்ந்தது.2019ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்வில் 100 கேள்விகள் கூட்டுறவில் இருந்தும் 100 கேள்விகள் பொது அறிவு பாடத்திட்டத்தில் இருந்தும் கேட்கும் நடைமுறை அமலுக்கு வந்தது.அப்பொழுது கூட நிறைய மாணவர்கள் தேர்வு நடைமுறை நியாயமாக நடக்குமா? அல்லது பணம் கொடுக்காமல் வேலைக்கு செல்ல முடியாது என்ற தவறான கருத்தின் அடிப்படையில் நிறைய திறமையான மாணவர்கள் தேர்வு எழுதவில்லை. ஆனால் நம்பிக்கையுடன் படித்த அனைவரும் வெற்றி பெற்றனர். நீதிமன்ற வழக்குகள் கொரோனா போன்ற காரணங்களினால் 2021 ஆம் ஆண்டு தான் அவர்கள் அனைவரும் பணியில் சேர முடிந்தது.

2020-2021 நடைபெற்ற தேர்வில் கூட தயாரான DCM மாணவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் மட்டுமே தேர்வு பெற்றனர்.மற்ற அனைவரும் கூட்டுறவு பயிற்சி ஏதாவது ஒரு வகையில் TNPSC தேர்வுக்கான பயிற்சி பெற்றுக் கொண்டிருந்த மாணவர்கள் மட்டுமே வெற்றி பெற்று தற்போது பணியில் உள்ளனர்.

2019ஆம் ஆண்டு நடந்த நேர்மையான DRB SRB தேர்வு இனிவரும் கூட்டுறவு தேர்வுகளில் பெரிய போட்டியை உருவாக்கியுள்ளது. 200 மாணவர்களை சேர்க்க முடியாமல் தடுமாறிய கூட்டுறவு பயிற்சி மையங்கள் அனைத்தும் இன்று  500 TO 800 மாணவர்களுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.

1.    எனவே இனி வரும் அனைத்து கூட்டுறவு தேர்வுகளும் கடுமையான போட்டி நிறைந்ததாக இருக்கும்.சென்ற தேர்வு நமக்கு ஒரு பாடத்தை உணர்த்தி உள்ளது.அது

2.    கோடி ரூபாய் கொடுத்தாலும் கூட்டுறவு வங்கி மற்றும் சங்கங்ளில் இனி குறுக்கு வழியில் வேலை வாங்க  முடியாது.

3.    இனிவரும் அனைத்து தேர்வுகளும் நேர்மையாக நடைபெறும்.

4.    அரசியல்வாதிகள் மற்றும் நிர்வாகத்தின் பங்களிப்பு DRB SRB தேர்வு நியமனங்களில் மிகவும் குறைவு

5.    கூட்டுறவு தேர்வுகளில் வெற்றி பெற வேண்டுமென்றால் TNPSC தேர்வுக்கு படிப்பது போல் படிக்க வேண்டும்.

6.    இனி வரும் DRB SRB தேர்வுகள் அனைத்தும் போட்டி பல மடங்கு இருக்கும்.

7.    நன்றாக படிக்கவில்லை என்றால் வேலை கிடைக்காது.

8.    நல்ல ரேங்க் வாங்காவிட்டால் சொந்த ஊரிலோ அல்லது சொந்த மாவட்டத்தில் வேலை செய்ய முடியாது.

இனி கூட்டுறவு தேர்வில் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும். அது தொடர்பாக கீழ் காணும் தலைப்புகளில் வாரம் ஒரு கட்டுரை வெளியிடப்படும். படித்து பயன் பெறுங்கள்

1) கடுமையான போட்டியை சமாளித்து கூட்டுறவு தேர்வில் வெற்றி பெறுவது எப்படி?

2) நல்ல கூட்டுறவு தேர்வு பயிற்சி மையத்தை தேர்வு செய்வது எப்படி?

3) மற்ற பயிற்சி மையங்கள் அனைத்தும் 10 முதல் 20 % வெற்றியை மட்டுமே கொடுத்த போது கனி அகாடமி மட்டும் எப்படி 71% சதவீத வெற்றியை கொடுக்க முடிந்தது

4) ஒரு ஆசிரியரின் பார்வையில் மாணவர்கள் செய்யும் மாபெரும் தவறுகள் என்ன?

5) கனி அகாடமியின் வெற்றி இரகசியம் என்ன?