உங்களுக்கான உண்மையான போட்டியாளர்கள் யார்?
உங்களுக்கான உண்மையான போட்டியாளர்கள் யார் … உங்களுக்கான போட்டியாளர் உங்களுடன் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் படித்துக்கொண்டிருக்கும் உன்னுடைய சக நண்பர் அல்ல.2-3 வருடங்களாக TNPSC தேர்வுக்கு படித்து அதில் வெற்றி கிடைக்காமல் வீட்டில் சமூகத்தில் அவமானப்பட்டு வேதனையில் வெந்து தினமும் ஏதாவது செய்து வாழ்க்கயில் முன்னேற வேண்டும் என்ற நினைப்பில் ஓடிக் கொண்டு ஏதாவது ஒன்று செய்து அரசு வேலைக்கு சென்று விட வேண்டும் என்ற ஆவலில் DCM படித்து கொண்டு உன்னுடன் பக்கத்து சீட்டில் உட்கார்ந்து கொண்டு ஒன்றும் தெரியாதது போல் இருக்கும் TNPSC ASPIRANTS தான் உன்னுடைய உண்மையான போட்டியாளர்.
எனவே நீங்கள் கூட்டுறவில் 100 மதிப்பெண் வாங்கினால் அவர்களும் கட்டாயம் 100 மதிப்பெண் வாங்குவார். ஆனால் பொது அறிவு பாடத்தில் நீ ஞானசூனியம் ஆனால் அவன் ஒரு 65% பொது அறிவு படத்தை படித்து முடித்தவர்.அவர்களை வெற்றி கொள்ள செய்ய வேண்டும் என்றால் நீங்கள் அவர்களை விட அதிகமாக பொது அறிவு பாடத்தில் மதிப்பெண் பெற வேண்டும். ஆனால் என்னிடம் படிக்க வரும் பல மாணவர்களிடம் நான் கவனிக்கும் விஷயம் என்னவென்றால் அவர்கள் கேட்கும் முதல் கேள்வி நான் கூட்டுறவு பாடத்தை எனக்கு நடத்துங்கள் கூட்டுறவு பாடத்தை நடத்துங்கள் (“எனக்கு பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேண்டும்”) என்ற எண்ணத்தில் தான் இருக்கின்றனர். அட முட்டாளே உன்னுடைய போட்டியாளர் யார் என்றால் அவன் ஏற்கனவே மூன்று இரண்டு மூன்று வருடங்கள் TNPSC தேர்வுக்காக பயிற்சி எடுத்து விட்டு அதில் தோல்வியை தழுவி மூன்று வருடம் தன்னுடைய வாழ்க்கையை போட்டித்தேர்வுக்கான அர்ப்பணித்துள்ளார் அவரை நீ வெற்றி கொள்ள வேண்டுமென்றால் நீ அவரை விட பல மடங்கு படித்திருக்க வேண்டும். உங்களின் அடுத்த உண்மையான போட்டியாளர் யார் என்றால் சென்ற முறை நேர்முக தேர்வுக்கு தகுதி பெற்று சில பல மதிப்பெண்கள் குறைவு காரணமாக வேலை கிடைக்காமல் இருக்கும் உங்கள் சீனியர் மாணவர்கள்.
1. 2020-21 கூட்டுறவு தேர்வு நேர்மையாகா நடக்காது என்ற எண்ணத்தில் ஒழுங்காக படிக்காத ஆனால் நான்ற்காக படிக்க கூடிய SENIOR DCM STUDENTS.
2. 2022-23 வருடம் DCM பயிற்சியில் சேர போகிறவர்கள்.
ஆனால் இன்று என்னிடம் பயிற்சியில் சேரும் பெரும்பாலான மாணவர்கள் கூட்டுறவு படித்து முடித்து விட்டால் வேலை கிடைத்து விடும் என்ற குருட்டு நம்பிக்கையில் தான் உள்ளனர். அது அவர்கள் செய்யும் மிகப் பெரிய தவறு .,
சரி அப்பொழுது கூட்டுறவு மாணவர்கள் செய்யும் மாபெரும் தவறுகள் என்ன அடுத்த கட்டுரையில் …….