Pages

Tuesday, July 26, 2022

கூட்டுறவு வங்கித் துறை தேர்வு- வரலாறு

 

 

 

கூட்டுறவு வங்கித் துறை தேர்வு வரலாறும் நடைமுறையும்

 

கடந்த காலங்களில் கூட்டுறவு தேர்வை பொருத்தவரை ஆள்சேர்ப்பு முறை என்பது எவ்வாறு நடைபெற்றுக் கொண்டிருந்தது என்றால் அதற்கென தெளிவான ஒரு ஆட்சேர்ப்பு நடைமுறை இல்லை. பின்னர் பல நீதிமன்ற வழக்குகள் மற்றும் அதன் தீர்ப்புகளின் காரணமாகவும் அந்த ஆள் சேர்ப்பு நடைமுறை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலங்களில் இருந்து பெறப்பட்ட பட்டியல்கள் மூலமாகவும் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

2012ஆம் ஆண்டு வரை கூட்டுறவு வங்கிகள் மற்றும் கூட்டுறவு  வேளாண்கடன் சங்கங்கள் தொடர்பான நியமனங்கள் அனைத்தும்  வேலைவாய்ப்பு அலுவலகங்கள் அல்லது பணம் கொடுப்பவர்களுக்கு தற்காலிக பணியாளர்கள் நியமனம் செய்து பின்னர் அவர்களை இரண்டு ஆண்டுகளுக்கு பின்பு பணி நிரந்தரம் செய்வது என்ற முறையிலேயே நடைபெற்றுக் கொண்டிருந்தது.

2009 Appointment through Employment Exchange அத்தேர்விலும் ஒரு சில இடங்கள் தவிர மற்ற இடங்களில் அரசியல்வாதிகளின் தலையீடுகள் மிக அதிக அளவில் இருந்த காரணத்தால் பணம் கொடுத்தவர்களே அதிக அளவில் வேலைக்கு சென்றனர்.

இத்தேர்வு நடைமுறைகள் 2012-14 ஆம் ஆண்டு மாறியது. பல உயர் நீதிமன்ற தீர்ப்புகள் சில பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு வைத்துத்தான் ஆட்களை தேர்வு செய்ய வேண்டும் என தீர்ப்பளித்ததால் வேறு வழி இல்லாமல் அரசு கூட்டுறவுத்துறை மாநில கூட்டுறவு பணியாளர் தேர்வாணையம் என்ற அமைப்பை ஏற்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது. முதல் முறையாக 2012ஆம் ஆண்டு போட்டி தேர்வுகள் மூலம் பணியாளர்களை தேர்வு செய்யும் நடைமுறை தொடங்கியது. அதன் காரணமாக 2012ம் ஆண்டு கூட்டுறவு வங்கிக்கான ஒரு தேர்வு அறிவிக்கை வெளியிடப்பட்டது. ஆனால் அந்த அறிக்கை பல நீதிமன்ற வழக்குகள் மற்றும் சட்ட சிக்கல்கள் காரணமாக 2014ஆம் ஆண்டு முடிவடைந்தது. அப்பொழுது கூட மத்திய மாவட்டம் கூட்டுறவு வங்கியில் மட்டுமே தேர்வுகள் மூலம் ஆட்களை தேர்வு செய்தனர்.

2012ஆம் ஆண்டு நடைபெற்ற கூட்டுறவு தேர்வில் மிக குறைந்த அளவே கூட்டுறவு தொடர்புடைய கேள்விகள் இடம் பெற்று இருந்தது. 5 கேள்விகள் மட்டுமே கூட்டுறவு பாடத்திலிருந்து கேட்கப்பட்டிருந்தது. மற்ற கேள்விகள் அனைத்துமே பொது அறிவு  பாடத்திட்டத்தில் கேட்கப்பட்டிருந்தது. 2012ஆம் ஆண்டு நடைபெற்ற கூட்டுறவு தேர்வு பணிகள் 2014 ஆம் ஆண்டு முடிவடைந்தது. பல நீதிமன்ற வழக்குகளுக்கு பின்னர் 2014 ஆம் ஆண்டு தேர்வுசெய்யப்பட்ட அனைவரும் பணியமர்த்தப்பட்டனர். அப்பொழுது கூட மத்திய மாவட்டம் கூட்டுறவு வங்கியில் மட்டுமே தேர்வுகள் மூலம் ஆட்களை தேர்வு செய்தனர்.

2019 ஆம் ஆண்டு மீண்டும் நேரடி போட்டி தேர்வுகள் மூலமாக ஆட்களை தேர்வு செய்யும் நடைமுறை தொடர்ந்தது.2019ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்வில் 100 கேள்விகள் கூட்டுறவில் இருந்தும் 100 கேள்விகள் பொது அறிவு பாடத்திட்டத்தில் இருந்தும் கேட்கும் நடைமுறை அமலுக்கு வந்தது.அப்பொழுது கூட நிறைய மாணவர்கள் தேர்வு நடைமுறை நியாயமாக நடக்குமா? அல்லது பணம் கொடுக்காமல் வேலைக்கு செல்ல முடியாது என்ற தவறான கருத்தின் அடிப்படையில் நிறைய திறமையான மாணவர்கள் தேர்வு எழுதவில்லை. ஆனால் நம்பிக்கையுடன் படித்த அனைவரும் வெற்றி பெற்றனர். நீதிமன்ற வழக்குகள் கொரோனா போன்ற காரணங்களினால் 2021 ஆம் ஆண்டு தான் அவர்கள் அனைவரும் பணியில் சேர முடிந்தது.

2020-2021 நடைபெற்ற தேர்வில் கூட தயாரான DCM மாணவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் மட்டுமே தேர்வு பெற்றனர்.மற்ற அனைவரும் கூட்டுறவு பயிற்சி ஏதாவது ஒரு வகையில் TNPSC தேர்வுக்கான பயிற்சி பெற்றுக் கொண்டிருந்த மாணவர்கள் மட்டுமே வெற்றி பெற்று தற்போது பணியில் உள்ளனர்.

2019ஆம் ஆண்டு நடந்த நேர்மையான DRB SRB தேர்வு இனிவரும் கூட்டுறவு தேர்வுகளில் பெரிய போட்டியை உருவாக்கியுள்ளது. 200 மாணவர்களை சேர்க்க முடியாமல் தடுமாறிய கூட்டுறவு பயிற்சி மையங்கள் அனைத்தும் இன்று  500 TO 800 மாணவர்களுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.

1.    எனவே இனி வரும் அனைத்து கூட்டுறவு தேர்வுகளும் கடுமையான போட்டி நிறைந்ததாக இருக்கும்.சென்ற தேர்வு நமக்கு ஒரு பாடத்தை உணர்த்தி உள்ளது.அது

2.    கோடி ரூபாய் கொடுத்தாலும் கூட்டுறவு வங்கி மற்றும் சங்கங்ளில் இனி குறுக்கு வழியில் வேலை வாங்க  முடியாது.

3.    இனிவரும் அனைத்து தேர்வுகளும் நேர்மையாக நடைபெறும்.

4.    அரசியல்வாதிகள் மற்றும் நிர்வாகத்தின் பங்களிப்பு DRB SRB தேர்வு நியமனங்களில் மிகவும் குறைவு

5.    கூட்டுறவு தேர்வுகளில் வெற்றி பெற வேண்டுமென்றால் TNPSC தேர்வுக்கு படிப்பது போல் படிக்க வேண்டும்.

6.    இனி வரும் DRB SRB தேர்வுகள் அனைத்தும் போட்டி பல மடங்கு இருக்கும்.

7.    நன்றாக படிக்கவில்லை என்றால் வேலை கிடைக்காது.

8.    நல்ல ரேங்க் வாங்காவிட்டால் சொந்த ஊரிலோ அல்லது சொந்த மாவட்டத்தில் வேலை செய்ய முடியாது.

இனி கூட்டுறவு தேர்வில் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும். அது தொடர்பாக கீழ் காணும் தலைப்புகளில் வாரம் ஒரு கட்டுரை வெளியிடப்படும். படித்து பயன் பெறுங்கள்

1) கடுமையான போட்டியை சமாளித்து கூட்டுறவு தேர்வில் வெற்றி பெறுவது எப்படி?

2) நல்ல கூட்டுறவு தேர்வு பயிற்சி மையத்தை தேர்வு செய்வது எப்படி?

3) மற்ற பயிற்சி மையங்கள் அனைத்தும் 10 முதல் 20 % வெற்றியை மட்டுமே கொடுத்த போது கனி அகாடமி மட்டும் எப்படி 71% சதவீத வெற்றியை கொடுக்க முடிந்தது

4) ஒரு ஆசிரியரின் பார்வையில் மாணவர்கள் செய்யும் மாபெரும் தவறுகள் என்ன?

5) கனி அகாடமியின் வெற்றி இரகசியம் என்ன?