கூட்டுறவு தேர்வில் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்
கூட்டுறவு தேர்வில் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்? படிக்க வேண்டிய புத்தகங்கள் என்ன போன்ற ஏராளமான கேள்விகள் மாணவர்களிடையே இருக்கும் அதை தீர்ப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம்.
கூட்டுறவு தேர்வு நடைமுறைகளை பொருத்தவரை மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படுகிறது.எழுத்துத் தேர்வில் 200 கேள்விகளுக்கு பிறகு நேர்முகத் தேர்வு 2:1 என்ற நடைமுறையில் நடத்தப்படுகிறது. நேர்முகத் தேர்வுக்கு 15 சதவீதம் மதிப்பெண்(30 Marks)அளிக்கப்படுகிறது.எழுத்துத் தேர்விற்கு 85 சதவீதம் மதிப்பெண்(170 Marks) அளிக்கப்படுகிறது.BUT DUE TO 15% RESTRICTIONS SRB & DRB FOLLOWS SOME FORMULAS TO ARRIVE THE MARK.
பொதுவாகவே எந்த ஒரு போட்டித் தேர்வுகளும் நேர்முகத் தேர்வில் பங்களிப்பு மிகவும் குறைவாகவே இருக்கும் என்ன காரணம் என்றால் பழைய நீதிமன்றத் தீர்ப்புகள் அரசியல்வாதிகளும் நிர்வாகமும் மாணவர்களை வஞ்சித்து விடக்கூடாது என்ற காரணத்தால் நேர்முகத்தேர்வில் குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச மதிப்பெண் எவ்வளவு அளிக்க வேண்டும். ஒரு மாணவனுக்கு 30 மதிப்பெண் அடுத்த மாணவனுக்கு 5 மதிப்பெண் என்ற ரீதியில் மதிப்பெண் அளித்து படிக்காத ஒரு மாணவனை வெற்றிபெற செய்துவிடமுடியாது.
IN TNPSC THEY ARE FOLLOWING 5 SLAB SYSTEMS. எனவே ஒரு நன்றாக படிக்கும் ஒரு மாணவன் குறைந்தது ஏழு கேள்விகள் அதிகமாக பதில் அளித்துவிட்டார் எனில் அவர் வெற்றியை எந்த ஒருவராலும் தடுக்க முடியாது. எனவே கூட்டுறவு தேர்வில் நேர்முகத் தேர்வில் பங்களிப்பு மிகவும் குறைவு. இங்குதான் அரசியல்வாதிகள் & அதிகாரிகளின் தலையீடுகள் அதிகம் வரும். அதை பயன்படுத்தி தான் அவர்கள் நேர்முக தேர்வுக்கு பணம் வாங்குகிறார்கள்.கனி அகாடமி ஆரம்பம் முதல் கேட் விட கேள்விகள் அதிக என்ற கொள்கையை பின்பற்றியதால் கனி அகாடமியில் படித்த எவரும் வேலைக்கு பணம் கொடுக்கவில்லை என்பதில் பெருமை கொள்கிறோம்.
எழுத்து தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும்
DRB SRB 200 கேள்விகள் கேட்கப்படுகிறது அந்த 200 கேள்விகளில் 100 கேள்விகள் கூட்டுறவு பாடத்திட்டத்திலிருந்து 100 கேள்விகள் தமிழ் மற்றும் பொது அறிவு பாடத்தில் இருந்தும் கேட்கப்படுகின்றது.கூட்டுறவில் கேட்கப்படும் 100 கேள்விகளில் 10 கேள்விகள் Computer Science பாடத்தில் இருந்து வரும். பொதுவாகவே கூட்டுறவு பாடத்திட்டம் என்பது மிகவும் சிறிய பாடத்திட்டம் அப்பாடத்திட்டத்தை மதிப்பெண் பெறுவது என்பதும் அப் பாடத்திட்டத்தை மிக குறுகிய காலத்தில் படித்து முடித்து விடலாம் என்பதும் உண்மையே.
ஆனால் நீங்கள் DRB SRB தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் உடையவர் என்றால் உங்களுடைய கவனம் பொதுஅறிவு பாடத்திட்டத்தில் தான் இருக்க வேண்டும். பொது அறிவு என்பது கிட்டத்தட்ட தமிழ் ,கணிதம் ,இந்திய வரலாறு ,அறிவியல், பொருளாதாரம், இந்திய அரசியலமைப்பு ,புவியியல் & நடப்பு நிகழ்வுகள் பகுதிகள் அடங்கிய மிகப்பெரிய பாடத்திட்டம்.அதைப் படித்து முடிக்க வேண்டும் என்றால் நீங்கள் குறைந்தது ஒரு வருடம் படிக்க வேண்டும் இதன் காரணமாகத்தான் சென்ற முறை வெற்றி பெற்ற கூட்டுறவு பணியாளர்களை பார்த்தால் அதில் பாதிக்கு மேற்பட்டோர் ஏதாவது ஒரு வகையில் TNPSC தேர்வுக்காக படித்துக் கொண்டு வந்தவர்களாக இருப்பார்கள்.
எனவே மேற்குறிய பொது அறிவு பாடத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து படிக்க துவங்குகள் அப்பொழுது தான் உங்களால் வெற்றி பெற முடியும் .ஆனால் பெரும்பாலான மாணவர்கள் கூட்டுறவை மட்டும் படித்து முடித்து விட்ட வெற்றி உறுதி என்ற எண்ணத்தில் தான் இருக்கிறார்கள்.ஏன் அவ்வாறு இருக்கிறார்கள் என்றால் உன்னடைய உண்மையான போட்டியாளர்கள் யார் என்பது அவர்களுக்கு தெரியவில்லை?
உன்னடைய உண்மையான போட்டியாளர்கள் யார் … அடுத்த கட்டுரையில்
HOW TO READ GK PORTION EASSY VERY SOON …..