ஒரு ஆசிரியரின் பார்வையில் மாணவர்களின் மாபெரும் தவறுகள் :
என்னுடைய ஆசிரியர் பணி 20 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கி விட்டாலும் கடந்த 10 வருங்களாக தான் முழு நேரமாக மாணவர்களுடன் இருக்கு வேண்டிய சூழ்நிலையில் நான் பயிற்சி அளித்த (லாப நோக்கமின்றி) என்னுடைய வழிகாட்டுதலில் படித்த 300 மாணவர்களில் 150 பேர் மட்டும் குறைந்தது எதாவது ஒரு தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். அரசு வேலையில் உள்ளனர் மற்றவர்கள் ஏன் தோல்வி அடைந்தனர் என ஆராய்ச்சி செய்த பொது கிடைத்த முடிவுகளே என்னை இந்த கட்டுரையை எழுத துண்டியது.
ஒரு TNPSC தேர்வில் 100000 Rank வாங்கிய ஒரு மாணவன் எப்படி அடுத்த தேர்வில் 1000 Rank இடத்தில் வந்து பாசாகிறார் ஆனால் Rank 4000 வாங்கிய மாணவர் மீண்டும் அதே Rank அல்லது அதற்கு குறைவாக Rank வாங்கி தோல்வி தழுவுகிறார் என்பதற்கான காரணத்தை பார்ப்போம்.
1. தன்னம்பிக்கை இல்லாதது:
TNPSC DRB SRB-போன்ற போட்டி தேர்வுகளில் பாஸாக வேண்டுமானால் ஒரு மாணவனுக்கு இருக்கு வேண்டிய முதல் தகுதி தன்னம்பிக்கை. என்ன தான் திறமையுடையவர்களாக இருந்தாலும் தன்னம்பிக்கை இல்லாதவர் தோல்வியையே தழுவ வேண்டி இருக்கும். தன்னபிக்கை உள்ளவர் எந்த ஒரு இடர்பாட்டையும் எளிதில் சமாளித்து தேர்வில் வெற்றி பெற்று விடுவார்.
2. சரியான பயிற்சி பயிற்சி மையத்திற்கு செல்லாதது
சரியான பயிற்சி மையம் மட்டும் அமைந்து விட்டால் எந்த ஒரு சராசரி மாணவனும் இரண்டு வருடங்களில் கட்டயம் பாஸ் பண்ணிவிட முடியும் , அனால் தற்பொழுது பயிற்சி மையங்களை விட வியாபார மையங்களே அதிகம் உள்ளது.வணிக நோக்கில் தான் எல்லா பயிற்சி மையங்களும் செயல்பட்டாலும் சரியான வழிகாட்டும் பயிற்சி மையங்களை தேர்ந்தெடுத்து விட்டால் உங்களின் வேலை பாதியாக குறைந்துவிடும். பயிற்சி மையங்கள் எவ்வாறு மாணவர்களை ஏமாறுகிறார்கள் என்பதற்கு சில எடுத்துகாட்டுக்கள்
1) அளவுக்கு அதிகமான விளம்பரங்கள்
2) தேர்ச்சி பெற்றவர்களை விட அதிக மாணவர்களை பாஸானதாக காட்டுவது
3) விளம்பரத்தை பார்த்து ஏமாறுவது
4) சென்னை, IAS, மனிதநேயம் போன்ற வார்த்தைகளை பயன்படுத்துவது
5) சென்ற தேர்வில் எங்கள் மட்டிரியகளில் இருந்து 180 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது என விளம்பரபடுத்துவது
6) அதிகமாக நோட்ஸ் எழுத வைக்கும் பயிற்சி மையங்கள்
7) கும்பல் அதிக உள்ள பயிற்சி மையம் தரமமானது என நினைப்பது.
8) ஒரே வகுப்பில் 200 TO 400 பேருக்கு பாடம் நடத்துவது கட்டாயம் மாணவர்களுக்கு எந்த ஒரு பயனும் இருக்காது
3. மெட்டிரியல் மெண்டல்கள்
என்னால் மெட்டிரியல் மெண்டல்கள் என நான் செல்லமாக குறிப்பிடும் இவர்கள் முக்கிய வேலையே படிக்க பல பயிற்சி மையங்களின் notes சேகரிக்கிறேன் என்ற பெயரில் படிப்பை மறந்து மெட்டிரியல் சேகரிப்பில் இறங்கி விடுவது தான். இவர்களின் பார்வையில் அதிக மேட்டிரியல்கள் / புத்தகங்கள் தான் வெற்றியை தீர்மானிக்கும் என நம்புகிறவர்கள் but my view is More luggage less comport.
4. பயிற்சி மையத்தில் சேர்ந்து விட்டாலே வேலை கிடைத்துவிடும் என நம்புவது.
பயிற்சி மையம் சென்று விட்டாலே வேலை கிடைத்து விடும் என நம்பும் மாணவர்கள் பலர் உள்ளனர். நான் ஒரு முறை பஸில் செல்லும் பொழுது ஒரு மாணவரிடம் பேச்சு கொடுக்க நேர்ந்தது அப்பொழுது அவர் ஒரு பிரபல பயிற்சி மையத்தில் 4 வருடமாக படித்து வருவதாகவும் அங்கு இரண்டு முன்று வருடம் படித்தால் மட்டுமே பாஸாக முடியம் அதனால் வேறு எந்த வேலைக்கு செல்லாமல் பயிற்சி மையம் சென்று வருவதாகவும் தெரிவித்தார் , ஆனால் உண்மை என்ன வென்றால் இன்று உள்ள போட்டி நிலையில் குறைத்து 6 மாதம் முதல் 1 வருடம் கடினமாக/ புத்திசாலித்தனமாக படித்தால் நிச்சயம் வேலை கிடைத்து விடும், தேர்வு அறிவிப்பு வந்தவுடன் பயிற்சி மையம் சென்றால் கட்டாயம் தோல்விதான் வரும் என்பதை உணர மாணவர்கள் மறுக்கிறார்கள்.
5.புரிந்து படிக்காதது /மனப்பாடம் செய்ய முயல்வது
புரிந்து படித்து விட்டால் மனபாடத்திற்கு அவசியம் இல்லை. மேலும் கேள்விகள் எந்த முறையில் வந்தாலும் விடை அளித்து விடலாம்.இது தெரியாமல் சிலர் நாள் முழுவது படித்தால் தான் வெற்றி பெற முடியும் என நினைத்து கொண்டு புத்தகமே கதியாக கிடக்கின்றனர் அது தவறு.
6. கூட்டுறவுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை பொது அறிவுக்கு கொடுக்க மறுப்பது
கூட்டுறவுக்கு கொடுக்கும் முக்கியதுவத்தை பொது அறிவுக்கு கொடுக்க மறுப்பது , உங்களின் வெற்றியை/ வாங்கும் ரேங்கையும் குறைத்து விடும்.
7.தேடல் இல்லாதது
Knowledge is power தேடல் என்பது பலருடன் பேசி, web search தேர்வு பற்றி பல புதிய விபரங்களை அறிந்து கொள்வது தேடல் நிறைய தகவல்களை அளிக்கும்.
8. மற்ற பயிற்சி மைய மாணவர்களுடன் நட்பு கொள்ளாமல் இருப்பது:
Where we are where they are என தெரிந்து கொள்ள கட்டாயம் மற்ற பயிற்சி மைய மாணவர்கள் மற்றும் சீனியர் மாணவர்கள் தொடர்பில் இருப்பது அவசியம் அப்பொழுது தான் தம்முடைய தவறுகளும், திறமைகளும் தெரிய வரும்.
9.காதல் கொண்டு கடமையை மறப்பது:
இவர்கள் குறைந்த எண்ணிக்கையில் இருந்தாலும் திறமையான மாணவர்கள் அல்லது மாணவிகளின் படிப்பை பாழ் செய்து விடுகிறது. காதலிக்கு பெண்ணின் படிப்பு தடை செய்யபடுகிறது ஆண்களுக்கோ வெற்றி தடைபடுகிறது
10.பேப்பர் படிக்காதது
நடப்பு நிகழ்வுகள் பகுதியில் மார்க் எடுக்க வேண்டுமானால் தினசரி பேப்பர் படிக்க வேண்டும்
11. நோட்சுகளை மட்டும் நம்புவது
12.படித்து கொண்டே வேலைக்கு செல்வது.
வேலைக்கு சென்று கொண்டே படித்தால் வெற்றி கிடைக்க மிகவும் கால தாமதம் ஆகும் எனவே சேலைக்கு செல்ல மிகவும் தாமதம் ஆகும்.
13. சொல் பேச்சை கேட்காதது
சொல் பேச்சை கேட்காமல் இருப்பது பற்றியே ஒரு மிகப்பெரிய கட்டுரை எழுதலாம் அதை பற்றி பின்னர் ஒரு விரிவான கட்டுரை வெளியிடப்படும்
14. Whatsapp /facebook கதியாக கிடப்பது
15. பொழுது போக்குக்கு முக்கியத்தும் கொடுப்பது
பொழுது போக்குக்கு முக்கியத்தும் கொடுப்பது இக் குறையை களைந்தாலே எந்த ஒரு மாணவரும் எளிதில் போட்டி தேர்வுகளில் வெற்றி பெறலாம்.
மேற்குறிய தவறுகளை மாணவர்கள் செய்ய விடாமல் சரியாக வழி காட்டுவதாலேயே தான் கனி அகாடமி மற்ற பயிற்சி மையங்களை விட மூன்று மடங்கு அதிக வெற்றிகளை தர முடிகிறது
அதை பற்றிய கட்டுரை அடுத்த பதிவில் ....